வெஜிடபிள் சாலட்

0
330

தேவையானபொருட்கள்

1. வெள்ளரிக்காய் – 1/2 கிலோ

2. கேரட் பெரியது – 1

3. தக்காளி பெரியது – 2

4. பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது – தேவையான அளவு

5. எலுமிச்சைச் சாறு – தேவையான அளவு

6. வறுத்து தோலுரித்த நிலக்கடலை – 2 கப்

7. உப்பு – தேவைக்கேற்ப

8. மிளகுதூள் – தேவையானஅளவு

9. கொத்தமல்லித ்தழை – தேவையானஅளவு

10. பட்டாணி – தேவையான அளவு

(மக்காச்சோளம் கொண்டு தயார் செய்த மிக்சர் பொட்டலம் சிறிதளவு).

செய்முறை

வெள்ளரிக்காயையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை சீவல் கொண்டு மெல்லியதாக சீவிக்கொள்ளவும்.

நறுக்கி வைத்திருக்கும் வெள்ளரி, தக்காளி கேரட், பச்சைமிளகாய் மற்றும் வறுத்த நிலக்கடலை ஆகியவற்றை பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து கிளரவும். தேவைக்கேற்ற அளவு உப்பு, மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து மறுபடியும் கிளரவும்.

பாத்திரத்தில் கிளரி வைத்திருப்பதை அள்ளி காற்று புகாத பாத்திரத்தில் (டப்பர்வேர்) போட்டு அதன் மீது சிறிதளவு மிக்சர் மற்றும் கொத்து மல்லிதழையை தூவி அழுத்தி மூடி வைக்கவும்.

அரைமணி நேரம் கழித்து எடுத்து உண்ணவும்.

பயன்கள்

உடல் எடை குறைப்பவர்களுக்கு நல்லது. குறிப்பாக தொப்பையைக் குறைக்க உதவும். பார்வைக்கோ ளாறுகள் நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. உடல் சூடு தனியும். வயிற்றுப்பி ரச்சனை, மலச்சிக்கல் நீங்கும். வெயில் காலத்திற்கு சிறந்ததாகும்.

LEAVE A REPLY