பாகிஸ்தான் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு 3 பேர் பலி;20 பேர் படுகாயம்

0
121

201606241615301182_Three-persons-killed-18-injured-in-blast-near-Quettas-Almo_SECVPFபாகிஸ்தானில் குவெட்டா நகரில் விமான நிலைஅய் ரோட்டில் உள்ள ஆல்மோ சவுக் சந்தை எப்போதுமே மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியாகும். அந்த சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்று வாங்கிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்குள்ள ஒரு கடையின் வெளியே பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

இருப்பினும் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு பற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பி வைத்தனர். இந்த குண்டுவெடிப்பால் அந்த சந்தையில் உள்ள பல கடைகளின் ஜன்னல்கள், சுவர்கள், சந்தையையொட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்தன.

வெடிகுண்டு ஒரு சைக்கிளில் வைக்கபட்டு அங்கு இருந்த பார்க்கிங் பகுதியில் நிறுத்தபட்டு வெடிக்க செய்யபட்டு உள்ளது.இதில் 6 கிலோ வெடிமருத்து வைக்கபட்டு ரிமோட் மூலம் வெடிகுண்டு வெடிக்க செய்யபட்டு உள்ளது.இந்த் குண்டு வெடிப்புக்கு எந்த் இயக்கமும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை

LEAVE A REPLY