வசீம் கொலை CCTV அறிக்கை விரைவில்

0
92

வசீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பான சிசிடிவி ஒளிப்பதிவு மேலதிக ஆய்வுக்காக கனடாவுக்கு அனுப்பப் பட்டிருப்பதாக நேற்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான முடிவுகள் ஓகஸ்ட் மாதம் முதல் வாரமளவில் கிடைக்கப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விவகாரத்தில் இதுவரை கைதாகியுள்ள முக்கிய நபர்களான முன்னாள் டி.ஐ.ஜி அநுர சேனாநாயக்க மற்றும் முன்னாள் நாரேஹன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சிசிடிவி பதிவு முக்கிய சாட்சியாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் அநுர சேனாநாயக்கவும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY