பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதி

0
194

imageமத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டமானது  கொழும்பு கோட்டையில் ஆரம்பமாகியது.

இந்தநிலையில் இதில் கலந்து கொள்வதற்காக வந்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன விபத்து ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அவர் தற்போது தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் தடையை மீறி முன்னோக்கி சென்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தினால் கொழும்புகோட்டை- லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY