ஸ்ரீலங்கா ஷெட் நிறுவனத்தினால் ஏறாவூர் நகர சுத்தித் தொழிலாளர்களுக்கு சிறந்த ரக பேரீச்சம் பழங்கள் வழங்கி வைப்பு

0
131

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC05929ஸ்ரீலங்கா ஷெட் நிறுவனத்தினால் ஏறாவூர் நகர சபையில் நகர சுத்தித் தொழிலாளர்களாகப் பணிபுரியும் 40 பேருக்கு புனித றமழான் நோன்பை முன்னிட்டு தலா ஒரு கிலோகிராம் நிறை கொண்ட சிறந்த ரக பேரீச்சம் பழங்கள் இன்று (24) வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டதாக ஏறாவூர் அபிவிருத்திக்கும் வலுவூட்டலுக்குமான மனித சேவைகள் நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித் தெரிவித்தார்.

மத்திய கிழக்கின் பரோபகாரி ஒருவரால் 500 கிலோகிராம் சிறந்த ரக பேரீச்சம் பழங்கள் நன்கொடையாக நோன்பாளிகளான ஏழைகளுக்கு வழங்கி வைக்குமாறு அனுப்பி வைக்கப்பட்டதாக அப்துல் வாஜித் மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஷெட் நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித், ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம், கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எம். அனஸ், சமூக சேவையாளர் எம்.ஏ.சி. அப்துல் லத்தீப் உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

DSC05907 DSC05917

LEAVE A REPLY