பால்லபான விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

0
102

accident kandy colombo roadகண்டி – கொழும்பு பிரதான வீதியின் பால்லபான பகுதியில் நேற்று இடம்பெற்ற பாரிய விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் முன்னதாக நேற்றைய தினம் மூவர் உயிரிழந்ததோடு, கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவரும் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்த 12 பேர் நேற்று கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தன.

வேன் ஒன்றும் தனியார் பஸ்ஸும் மோதியதில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றது.

#Adaderana

LEAVE A REPLY