டேவிட் கமரூன் பதவி விலக போவதாக அறிவிப்பு

0
186

David Cameronஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதா இல்லையா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பிரதமர் டேவிட் கமரூன் தமது பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தாம் பிரதமர் பதவிலியிருந்து விலகுவதாக அவர் இன்று அறிவிப்பு விடுத்துள்ளார்.

மக்கள் கருத்துக் கணிப்பின் படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிந்து பிரித்தானியா விலக வேண்டும் என 52 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

எனினும், ஒன்றியத்திலிருந்து விலகக் கூடாது என 48 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்திற்கு அமைய தாம் பதவிலியிருந்து விலகுவதாகவும், பிரித்தானியாவுக்கான புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் டேவிட் கமரூன் ஊடகங்களின் மத்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாம் பிரதமராக பணியாற்றும் எதிர்வரும் சில மாதங்களுக்கு நாட்டிற்கு அவசியமான விடயங்களை ஒழுங்கமைய முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#Adaderana

LEAVE A REPLY