சீனாவில் மோசமான வானிலையால் 78 பேர் பரிதாப பலி, 200 பேர் மோசமாக பாதிப்பு

0
90

160623141557_china_2905910gசூறாவளி காற்று, ஆழங்கட்டி மழை, பலத்த மழை என சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியான்சு மிகவும் மோசமான வானிலை நிலவி வருகிறது.

இந்த மோசமான வானிலையால் 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். அதில் 200 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. இதுவரை 78 பேர் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்துள்ளனர்.

யான்செங் நகரத்தை சுமார் 2.30 மணியளவில் புயல் தாக்கியது. கிராமங்களில் பெரிய பெரிய மரங்கள் சாய்ந்தன. காற்று மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது.

மத்திய சீனாவில் வெள்ள பாதிப்பினால் இதுவரை 22 பேர் இறந்துள்ளதாகவும், ஒரு லட்சத்து 97 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் குயிஸோயு மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY