இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தெரிவு

0
71

DUBAI, UNITED ARAB EMIRATES - NOVEMBER 05:  Anil Kumble,Chairman of the ICC Cricket Commitee  talks to the media at  a press conference to announce the shortlists for the LG ICC Awards 2014 at the ICC Headquarters in Dubai Sports City on November 5, 2014 in Dubai, United Arab Emirates.  (Photo by Francois Nel/Getty Images)

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் அனில் கும்ப்ளே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் மற்றும் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக் காலம், டி20 உலகக்கிண்ணப் போட்டியோடு முடிவடைந்தது.

இந்நிலையில் புதிய பயிற்சியாளராக பணிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் 21 பேரிடம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லஷ்மண் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு நேர்காணல் நடத்தியது.

புதிய பயிற்சியாளருக்கு தகுதியானவர் யார் என்பதற்கான பட்டியலை அந்த குழு பிசிசிஐ-யிடம் அளித்தது.

இதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அனில் கும்ப்ளே புதிய பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 1 ஆண்டு நீடிப்பார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

LEAVE A REPLY