சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் சூறாவளி தாக்குதலில் 50 பேர் பலி

0
99

160623141557_china_2905910gசீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சூவை தாக்கிய சூறாவளி காரணமாக 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த புயல் காரணமாக யான்செங் நகரின் பல பகுதிகளிலிருந்த வீடுகள் சரிந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் பல பகுதிகள் அடை மழையை சந்தித்துள்ளன. மத்திய சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 2 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

-BBC-

LEAVE A REPLY