புதிய மைல்கல்லை எட்டியது இன்ஸ்டாகிராம்

0
94

079916_5279fce8963c4771b311bd0eb27e5db8புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை பகிரும் வசதியினை தரும் வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் திகழ்கின்றது.

மிகக் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் இத்தளம் பிரபல்யம் அடைந்துவருகின்றமை அனைவரும் அறிந்ததே.

இவ்வாறான நிலையில் தற்போது 500 மில்லியன் பயனர்களை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

இதேவேளை நாள் தோறும் 300 மில்லியன் பயனர்கள் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி சமூகவலைத்தளமாக திகழும் பேஸ்புக்கில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் வசதி தரப்பட்டுள்ள நிலையிலும் இன்ஸ்டாகிராமிற்கு உள்ள வரவேற்பு பிரம்மிக்க வைப்பதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இன்ஸ்டாகிராமிற்கான அப்பிளிக்கேஷனில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் புதிய பயனர்களை ஈட்டி விரைவில் ஒரு பில்லியனை தொடக்கூடியதாக இருக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY