(Video) ஜெர்மனி திரையரங்கில் துப்பாக்கி சூடு: 50 பேர் படுகாயம்; துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

0
136

germany-shootingஜெர்மனியின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள கினெபோலிஸ் திரையரங்கு கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த நபர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் குறைந்தது 50 பேர் படுகாயம் அடைந்ததாக அந்த நாட்டை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாகி சூடு நடத்திய நபர் கையில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய பெல்ட் அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது திரையரங்கு முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. துப்பாக்கி பிரயோகம் செய்த நபரை தாம் சுட்டுக் கொன்றுவிட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வேறு உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. முழு விபரங்கள் விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY