உதவும் குரல்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர். அஸ்லம் உடனான நேர்காணல்

0
209

Dr. Aslamஉதவும் குரல்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் வைத்தியருமான டாக்டர் பாறுக் முஹம்மட் அஸ்லம் (MBBS ) வழங்கிய நேர்காணல்.

01. ‘உதவும் குரல்கள்’ தொலைபேசி மூல மருத்துவ ஆலோசனை சேவையை ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?

எனது கடந்த பத்து வருட கால மருத்துவ துறையில் கண்ட அனுபவத்தை அடிப்படையாக கொண்டு இந்த சேவையை ஆரம்பித்திருக்கின்றேன். குறிப்பாக எமது நாட்டு மக்களிடம் மருத்துவம் பற்றிய அறிவு மிகக் குறைவாக உள்ளது. மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு தூரமாக்கப்பட்டுள்ளது. மருத்துவருடன் நோயாளி பேசக் கூடிய நேரம் போதாது.

அவ்வாறு தான் இலங்கையில் மருத்துவத்துறையின் கட்டமைப்பு காணப்படுகின்றது. இதனால் சாதரணமாக தடுக்கக் கூடிய நோய்கள், நோய்களால் ஏற்படும் பாரிய பக்க விளைவுகள் கூட இன்று தடுக்கப்படாமல் மோசமான பின்விளைவுகளை பரவலாக ஏற்படுத்தியுள்ளது. இந்த அனுபவ கற்றலை அடிப்படையாக கொண்டு மருத்துவத்துறையில் இத்தகைய குறைபாட்டை இல்லாமல் செய்யும் நோக்கத்திலயே மக்களுக்கான இந்த சேவையை ஆரம்பித்துள்ளேன்.

02.உதவும் குரல்கள் அமைப்பினூடாக எவ்வாறான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறீர்கள்?

என்னுடைய தனிப்பட்ட ஒரு முயற்சியாகவே இந்த உதவும் குரல்கள் இலவச மருத்துவ ஆலோசனை சேவையை வழங்கி வருகின்றேன். இதற்கான தலைமை காரியாலையம் மருதமுனை அமைந்துள்ளது.

* எங்களிடம் அங்கத்தும் பெறும் பொதுமக்கள் மருத்துவ ஆலோசனை, மருத்துவம் சம்பந்தமான ஆலோசனைகளை பெறுவதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வைத்தியர்களுடன் பேச முடியும்.

* இன்று பொதுமக்கள் வீனிவியாதி (Diabetes Mellitus), உயர் குருதி அமுக்கம் (High blood pressure), உயர் கொழுப்பு (Hepercholesterolemia), மற்றும் இருதய நோய்கள் (Heart diseases) போன்ற நோய்களினால் அவதியுறுபபர்கள் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அறிந்து கொள்ளமுடியும். இதனால் பாரதூரமான பின்விளைவுகளை தடுத்துக் கொள்ள முடியம் என நம்புகின்றோம்.

* மார்பக புற்று நோய், குடல் புற்று நோய், கர்ப்பப்பை மற்றும் சூலகங்களில் ஏற்படும் புற்று நோய்களினால் குடும்பத்தில் எவராவது பீடிக்கப்பட்டிருந்தால் ஏனை குடும்ப அங்கத்தவர்கள் ஆரம்பத்திலேயே இந்த நோயை கண்டறிவதற்குரிய பரிசோதனைகளைச் (Screening Test) எவ்வாறு செய்து கொள்ள வேண்டும் என்ற விடயங்களை இந்த சேவை ஊடாக அறிந்து கொள்ள முடியும்.

*மாத விடாய் மற்றும் பாலியல் சம்பந்தமான சந்தேகங்கள், பிரச்சினைகள், குழந்தைப்பேறின்மைக்கான காரணங்கள் மற்றும் மாற்றுத் தீர்வுகள், கர்ப்பகாலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், உணவுப்பழக்க வழக்கங்கள் போன்ற ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றோம்.

*தாய்ப்பாலூட்டுதல், குழந்தைப் பராமரிப்பு, நோய்த் தடுப்பூசியேற்றுதல் மற்றும் குழந்தையின் வளர்ச்சிப் படிகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆலோசனைகளை நாம் வழங்குகி வருகின்றோம்.

03. நீங்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்தில் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக இருந்து சமூக செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர் என்ற வகையில். இந்த சேவை குறித்து மக்கள் மத்தியிலான ஆதரவு எப்படி இருக்கிறது?

நல்லதொரு கேள்வி என்னைப் பொறுத்தளவில் நான் அவுஸ்ரேலியா நாட்டின் குடியுரிமை பெற்ற மருத்துவத்துறை மாணவியை திருமணம் செய்துள்ளேன். எனக்கும் அங்கு குடியுரிமை கிடைத்துள்ளது. அங்கு மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் அன்னியொன்னியமானதாகும். இதனையே இங்குள்ள மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

நமது நாட்டின் சுகாதார துறையின் ஒழுங்கமைப்பில் உள்ள இத்தகைய குறைபாட்டை இந்த மருத்துவ சேவை ஓரளவேனும் நிவர்த்தி செய்யும் என மக்கள் நம்புகின்றார்கள். எதிர்காலத்தில் மருத்துவர்கள் – பொதுமக்கள் இடையில் சிறந்த உறவு முறையை எமது ஆலோசனை சேவை முறைமூலம் கிடைக்கும் என நாமும் எதிர்பார்கின்றோம். ஆரம்பத்தில் சில விமர்சனங்களை எதிர்நோக்கினோம். இதற்கு ஒரு சபையை ஆரம்பத்திருக்கிறேன். சிறந்த வைத்தியர்களை கொண்ட குழு ஒன்றை நியமத்திருக்கின்றேன். மக்கள் மத்தியில் இதனை கொண்டு செல்ல வேண்டிய தேவையுள்ளது.

04.இதற்கு நிறைய பண உதவிகள் தேவைப்படுமே அதனை எவ்வாறு நிவர்த்தி செய்கிறீர்கள்?

நான் மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்ற ஒருவன். எனவே மக்களின் மருத்துவத் தேவையை நிறைவுசெய்ய சேவையாற்ற விரும்புகின்றேன். எனது சொந்தப் பணத்தில் இந்த சேவையை வழங்க வேண்டும் என நினைக்கிறேன்.

05. மக்களின் மனநிலையை மாற்றுவதன் மூலம் மருத்துவ அறிவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம் என நினைக்கின்றீர்களா?

ஆம், மக்களின் மனநிலை இன்னும் மாற வேண்டும். நோயாளியின் மனநிலை மாறாவிடின் நோயின் தீவிர போக்கு நிலையை குறைக்க முடியாது. மக்கள் தங்களது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சோர்வு, மனஅழுத்தம் (Stress) போன்றவைகளிலிருந்து விடுபட முடியும்.

இன்று உடல் பருமன் உடையவர்களது தொகை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இதற்கான சரியான வைத்திய ஆலோசனைகளை எங்கள் சேவை ஊடாக பெற்று அதனால் ஏற்படும் மிக மோசமான பின்விளைகளில் இருந்து தவிர்ந்து கொள்ள முடியும்.

06. இறுதியாக பொதுமக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எமது இந்த சேவை ‘ வருமுன் கத்தல் வந்த பின் குணப்படுத்தலைவிட சிறந்தது’ என்ற மருத்துவ சிந்தனைக்கு அமைய இது நோயாளகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. ஆரோக்கியமானவர்களும் இணைந்து கொண்டு அவர்களின் வாழ்கை முறையில் முறையான மாற்றத்தை ஏற்படுத்தும் வழிவகைகளை அறிந்து கொண்டு வாழ்நாள் முழுவதும் சுகதேகியாம் வாழ்பதற்கான ஆலோசனைகளை பெற முடியும்.

உதவும் குரல்கள் தொலைபேசி வைத்திய ஆலோசனை சேவையினூட. இலங்கை மருத்துவ சபையில் (Srilanka Medical Council) பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களினால் மாத்திரமே மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. உங்கள் நோய் பற்றிய தகவல்கள் மற்றும் உங்கள் சுகாதார நிலமை போன்ற தகவல்கள் மிகவும் இரகசியமாக பேணப்படுவதுடன் அவை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்தப்பட மாட்டாது.

வாரநாட்களில் திங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரைக்கும், சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் எமது சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

எம்மோடு இணைந்து கொள்ள O67- 4 929 929 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

IMG-20160615-WA0004

LEAVE A REPLY