(Poem) எது நிஜம்

0
22

(நிஷவ்ஸ்)

வெஸலிலே சுற்றுவதோ?
வெகன் ஆரில் ஓடுவதோ?
அசலான நிம்மதியை
அளிக்கும் முறை எதுவோ?
பெஷனான வெஸலுமல்ல
பெரிய பெஜிரோ ஜீப்புமல்ல
நசல் நோய் ஏதுமில்லா
நல் வாழ்வே நிம்மதியாம்.

ஐபோனில் லேட்டஸ்ட்டோ?
அன்றொய்ட்டின் மாஸ்மலோவோ?
மெய்யான நிம்மதியை
மிகையாகத் தரும் எதுவோ?
ஹைபை போணுமல்ல
கடனுக்கெடுத்த டெப்புமல்ல
ஐவேளை தொழுவதுவே
அளிக்கும் ஆறுதலை.

ஆட்டிறைச்சி புரியாணியோ?
அப்பாலே வட்டிலப்பமோ?
ஏற்ற சஹர் உணவு
எதுவென்று அறிவாயோ?
ஆட்டிறைச்சி கறியுமல்ல
அரைக் கோழி ரோஸுமல்ல
கூட்டு சேர்ந்து குடும்பத்துடன்
குடித்து உண்ணல் சுகமாகும்.

கழுவாத ஜுப்பாவோ?
கட் பண்ணா தலைமுடியோ?
இழிவான துன்யா வாழ்வை
இயம்பும் முறை எதுவோ?
அழுக்கான உடையுமல்ல
ஆளுக்குப் பெரிய தஸ்பீஹுமல்ல
ஒழுக்கமாய் வாழுவதே
உண்மையான ஆத்மீகம்

LEAVE A REPLY