சிறுவனுக்கு கரண்டிச் சூடு; உறவினர் ஒருவர் கைது: காத்தான்குடி-பாலமுனையில் சம்பவம்

0
161

(விஷேட நிருபர்)

DSCN0699காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனைப் பிரதேசத்தில் 10 வயதுச் சிறுவன் ஒருவனுக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் அச்சிறுவனின் உறவு முறையான 21 வயதுடைய ஒருவரை இன்று (23) வியாழக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சிறுவனுக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, இச்சிறுவனின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் விசாரணை மேற்கொண்டு,  குறித்த சிறுவனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அங்கு சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, கரண்டியை நெருப்பில் காய்ச்சி சூடு வைத்தமை தெரியவந்துள்ளது.

இச்சிறுவனின் இடுப்பு மற்றும் பின்புறம் பகுதிகளில் நெருப்புச் சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், குறித்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதனைத் தொடர்ந்து மேற்படி சந்தேக நபரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிறுவனின் பெற்றோர் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதால், உறவு முறையான மேற்படி சந்தேக நபரின் வீட்டிலேயே இச்சிறுவன் இருந்துவந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

DSCN0700 DSCN0701 DSCN0702 DSCN0705

LEAVE A REPLY