அனுர சேனாநாயக்க, சுமித் பெரேராவுக்கு பிணை மறுப்பு

0
12

1463998503832முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க ஆகியோர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை, கொழும்பு மேலதிக நீதவான் நிதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார்.

மேலும் இவர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, இவர்கள் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY