பெளத்த கொடி எரிப்பு; இனங்களுக்கிடையே விரிசலை உருவாக்கும்: ஞானசார தேரர் காட்டம்

0
123

galagoda-atte-gnanasara Thero BBSமுஸ்­லிம்கள் மஹி­யங்­க­னையில் வெசாக் நோன்­மதித் தினத்­தன்று பௌத்த கொடி­க­ளையும் வெசாக் கூடு­க­ளையும் எரித்­துள்­ளமை பௌத்­தர்­களின் மனதைப் புண்­ப­டுத்­தி­யுள்­ளது.

இவ்­வா­றான செயல்­களே இனங்­க­ளுக்­கி­டையில் விரி­சல்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன என பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

இந்தச் சம்­ப­வத்தை அடுத்து எதிர்ப்பு வெளி­யிட்ட இரு சிங்­க­ள­வர்கள் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். அவர்­களின் விடு­தலையை துரி­தப்­ப­டுத்த வேண்டும் எனவும் கூறினார்.

மஹி­யங்­க­னையில் பௌத்த கொடி எரிக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து சுவ­ரொட்­டிகள் ஒட்­டி­யமை, வர்த்­தக நிலை­யங்­களை மூடு­வ­தற்கு உத்­த­ரவு பிறப்­பித்­தமை ஆகிய குற்­றங்­களின் பேரில் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பெரும்­பான்மை இனத்­தவர் இரு­வரின் விடு­த­லையை வலி­யு­றுத்தி நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மஹி­யங்­கனை நகரில் ஓர் எதிர்ப்புப் பேரணி நடத்­தப்­பட்­டது.

எதிர்ப்புப் பேர­ணியில் ஞான­சார தேரரும் கலந்து கொண்டார்.

இந்த எதிர்ப்புப் பேரணி தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில், மஹி­யங்­க­னையில் பொலிஸார் பக்­க­சார்­பா­கவே நடந்து கொள்­கின்­றனர். பௌத்த கொடி மற்றும் வெசாக் கூடுகள் எரித்­த­மைக்கு எதி­ராக குரல் கொடுத்­த­வர்கள் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளமை தவ­றா­ன­தாகும்.

இது தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறை­யிட்­டி­ருக்­கிறோம்.

பல நாட்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள இரு­வ­ரையும் விடு­தலை செய்து மேல­திக சட்­ட­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க உத­வு­மாறு பொலிஸ் மா அதி­பரை வேண்­டி­யி­ருக்­கிறோம் என்றார்.

கடந்த வெசாக் நோன்­மதி தினத்­தன்று மஹி­யங்­கனை பன்­ச­லையில் பௌத்த குரு ஒருவர் ஆற்­றிய மார்க்க போத­னை­யின்­போது முஸ்­லிம்கள் பற்றி தவ­றான கருத்­துகள் தெரி­விக்­கப்­பட்­டது என்­ப­தனால் கோப­ம­டைந்த பங்­க­ர­கம்­ம­னயைச் சேர்ந்த முஸ்லிம் இளை­ஞர்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பௌத்த கொடி­களை எரித்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இத­னை­ய­டுத்து மஹி­யங்­கனை பௌத்த குரு­மாரும் மக்­களும் பொலிஸில் முறைப்­பாடு செய்­தனர்.

இதே­வேளை பங்­க­ர­கம்­ம­னயைச் சேர்ந்த 8 முஸ்லிம் இளை­ஞர்கள் சம்­பவம் தொடர்பில் பொலிஸில் சர­ண­டைந்­த­தை­ய­டுத்து பதுளை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

அத்­துடன் பௌத்த கொடி எரிப்­புக்கு எதிர்ப்பு தெரி­வித்து மஹி­யங்­க­னையில் சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­ட­துடன் கடைகள் அடைப்­புக்கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

இச் சம்­பவம் தொடர்பில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். சந்­தே­கத்தின் பேரில் மேலும் பலரை பொலிஸார் தேடி­வ­ரு­கின்­றனர்.

பெரும்­பான்மை இனத்­த­வரின் கைதுக்கு எதி­ரா­கவே நேற்று முன்­தினம் எதிர்ப்பு பேரணி நடாத்­தப்­பட்­டது. முஸ்­லிம்கள் அதி­க­மாக வசிக்கும் பங்­க­ர­கம்­மன, ரோஹன, தம்­ப­கொல்ல ஆகிய கிரா­மங்­களில் மேல­திக பொலிஸார் பாது­காப்பில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

மஹி­யங்­கனை நகரில் கறுப்பு கொடிகள் பறக்­க­வி­டப்­பட்டு, கடை­ய­டைப்பும் நடந்­துள்­ளது. அந்தப் பின்­ன­ணியில், சத்­தி­யா­கி­ர­கத்தில் ஈடு­பட்­டி­ருந்த தேரர்­க­ளுடன் அங்கு வந்த ஞான­சார தேரரும் இணைந்து இன ரீதி­யான கார­சா­ர­மான கருத்­துக்­களை தெரி­வித்­ததை தொடர்ந்து அமை­தி­யின்மை தோன்­று­வ­தற்­கான சூழ்­நிலை ஏற்­பட்­டது.

இது பற்றி அங்கு வசிக்கும் வட­ரக்கே விஜித தேரரும் கவலை தெரி­வித்­தி­ருக்­கிறார்.

சென்ற மாதம் இப்­ப­கு­தியில் நடை­பெற்ற ஒரு சம்­ப­வத்தை தொடர்ந்து அசம்­பா­விதம் ஏற்­ப­ட­வி­ருந்த வேளை­யிலும், அமைச்சர் ஹக்கீம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ர­வுடன் உட­ன­டி­யாக தொடர்­பு­கொண்­டதன் பய­னா­கவும், இரு சமூ­கங்­களை சேர்ந்த சமயத் தலை­வர்கள், ஊர் முக்­கியஸ்த்தர்களுடன் தொடர்­பு­கொண்­டதன் பய­னா­கவும், இரு சமூ­கங்­களை சேர்ந்த சமயத் தலை­வர்கள், ஊர் முக்­கியஸ்;தர்கள் ஆகி­யோரின் சம­ரச முயற்­சி­யி­னாலும், நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு இருந்­தது.

இதே­வேளை, மொன­ரா­கலை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதும் இரவு நேரத்தில் விஷமிகளால் கல் வீச்சு தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் அமைச்சர் ஹக்கீம் கவனம் செலுத்தி வருகின்றார்.

#Vidivelli

LEAVE A REPLY