பாத்யா மாவத்தையில் இரகசியமாக பள்ளிவாசல் கட்டுவதை நிறுத்துங்கள்

0
172

பிக்குகள் தலை­மையில் தெஹிவளை மேயரிடம் முறைப்பாடு

pathiya palliதெஹி­வளை பாத்யா மாவத்­தை­யி­லுள்ள பள்­ளி­வா­சலை முஸ்­லிம்கள் இர­க­சி­ய­மாக கட்டிக் கொண்­டிருக்­கி­றார்கள். இதனை உடனே நிறுத்­துங்கள்.

அங்கு மத்­ர­ஸாவோ, பள்­ளி­வா­சலோ இருக்­கக்­கூ­டாது என தெஹி­வளை பகு­தியைச் சேர்ந்த குரு­மாரும் பௌத்த மக்­களும் நேற்று தெஹி­வளை கல்­கிஸை மாந­கர சபை முதல்வர் ஏ.எம்.டீ.எச்.தன­சிறி அம­ர­துங்­கவைச் சந்­தித்து முறைப்­பாடு செய்­தனர்.

தெஹி­வளை – கல்­கிஸை மாந­கர சபை பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணி­களை நிறுத்­தா­மைக்கு பலத்த கண்­ட­னத்தையும் வெளி­யிட்­டனர்.

நேற்று காலை தெஹி­வளை – கல்­கிஸை மாந­கர சபை அலு­வ­ல­கத்­துக்கு பாத்யா மாவத்தை பகு­தியைச் சேர்ந்த குரு­மார்கள் உட்­பட சுமார் 50 பேர் வருகை தந்­தனர். இவர்­களில் பாத்யா மாவத்தை களு­போ­வில சாரா­னந்த தம்ம நிகே­த­னயைச் சேர்ந்த குரு­மார்­களும் களு­போ­வில ஹத்­போ­திய ரஜ­மகா விகா­ரையைச் சேர்ந்த குரு­மார்­களும் அடங்­கு­கின்­றனர்.

குழு­வி­னரின் முறைப்­பா­டு­களை செவி­ம­டுத்த தெஹி­வளை கல்­கிஸை மாந­கர சபை முதல்வர் அங்கு இர­க­சி­ய­மாக கட்­டட வேலை நடை­பெ­று­கின்­றதா? இல்­லையா-? என்­பது எனக்குத் தெரி­யாது. சமய பாட­சாலை விஸ்­த­ரிப்­புக்­காக அனு­மதி மாந­கர சபை­யினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது கட்­டிட வேலைகள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன என்றார்.

சட்­ட­ரீ­தி­யாக அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் அப்­ப­குதி மக்கள் எதிர்ப்­பதால் கட்­ட­ட­வே­லைகள் தடை செய்­யப்­ப­ட­வேண்டும் என்று குழுவினர் வலி­யு­றுத்­தி­னார்.

சட்­ட­ரீ­தி­யான அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளதால் நீதி­மன்ற உத்­த­ர­வொன்றின் மூலமே விஸ்­த­ரிப்பு பணி­களை நிரந்­த­ர­மாக நிறுத்த முடி­யு­மென மேயர் தெரி­வித்தார்.

மாந­கர சபை ஆணை­யாளர் சபையின் தொழில்­நுட்ப அதி­கா­ரியை பள்­ளி­வாசல் நிர்­மா­ணங்கள் தொடர்­பான அறிக்­கை­யொன்­றினை 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு சமர்ப்­பிக்­கும்­படி உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் தீர்­வொன்­றினைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக தெஹி­வளை– கல்­கிஸை மாந­கர சபை அலு­வ­ல­கத்தில் மாந­கர சபை முதல்­வரின் தலை­மையில் கலந்­து­ரை­யா­ட­லொன்று எதிர்வரும் திங்கட் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், பள்ளிவாசல் பரிபாலன சபை பிரதிநிதிகள், பன்சலைகளின் குருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

#Vidivelli

LEAVE A REPLY