நைஜீரியாவில் அகதி முகாமில் இருந்த 200 பேர் பட்டினியால் பலி

0
92

201606231216568380_Nearly-200-refugees-die-of-starvation-in-Nigeria-camp_SECVPFஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போஹாகராம் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். 7 வருடமாக அவர்களுடைய அட்டகாசம் அதிகமாக உள்ளது.

இதில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். போஹாகராம் தீவிரவாதிகள் பகுதிகளில் இருந்து தப்பிய 24 ஆயிரம் பேர் அங்குள்ள பமா என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தனர்.

ஆனால் தீவிரவாதிகள் தடுத்ததால் இவர்களுக்கு போதிய உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் கடந்த ஒரு மாதத்தில் 200 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 5-ல் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த பகுதிக்கு சர்வதேச மருத்துவ குழு ஒன்று தற்போது சென்றுள்ளது. அவர்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது சம்மந்தமாக முகாமில் தங்கி இருப்பவர்கள் கூறும்போது, உணவு இல்லாமலும், நோயினாலும் தினமும் 30 பேர் வரை உயிரிழந்து கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளனர்

LEAVE A REPLY