சுகாதார சேவைகளுக்கு வற் வரி விதிப்புக்கள் இல்லை!

0
112

c64f4664160405f01e244b59502454f6_Lமருத்துவ சேவைக்கான வற் வரியை மருந்து வகைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைக் கட்டணங்கள் உள்ளிட்ட வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு இதற்குப் பதிலாக புகையிலை நிறுவனங்களிடம் வரியை 90 வீதம் அறிவிட தீர்மானித்துள்ளோம் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், மருத்துவ சேவைக்கான வற் வரியை மருந்து வகைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைக் கட்டணங்கள் உள்ளிட்ட நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் தனியார் வைத்தியசாலைக்கான வசதிகளும் வற் வரிக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள வற் வரிக்கும் தனியார் வைத்தியசாலை கட்டணங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY