(Exclusive Video) மாறுபட்ட கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி: மு.காவில் இணைந்துள்ளதாக கே.பீ.எஸ். ஹமீட் அறிவிப்பு

0
25

Hameed Hafiz Naseerஅகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சியின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் நேற்று (21) செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் உத்தியோக பூர்வமாக கட்சியின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அஹமட் முன்னிலையில் திருகோனமலை உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து இணைந்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதன் பின்னர் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் “இன்று நான் முதலமைச்சரை சிநேகபூர்வமாக சந்திந்து உரையாடினேன் கட்சியில் இணையவில்லை” என்றார்.

இந்நிலையில் இன்று ஓட்டமாவடியில் நடைபெற்ற மீன் சந்தை கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் உரையாற்றிய முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட், “நான் மு.காவில் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளேன்” என்று கூறினார்

அவரது முழுமையான உரை இதோ!

காணொளி: எமது வாழைச்சேனை நிருபர்

LEAVE A REPLY