ஓட்டமாவடியில் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன் சந்தை கட்டிடத் தொகுதி இன்று திறப்பு

0
140

(வாழைச்சேனை நிருபர்)

05ஓட்டமாவடியில் மிக நீண்டநாளாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இழுபரியில் இருந்த மீன் சந்தை கட்டிடத் தொகுதி திறப்பு விழாவும் முச்சக்கர வண்டிகளுக்கு பாதை அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு மற்றும் இப்தார் நிகழ்வு என்பன இன்று (22) மாலை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜவாத், கிழக்கு மாகான முதலமைச்சு, உள்ளுராட்சி கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கு-கிழக்கு உள்ளுராட்சி மேம்படுத்தல் திட்டத்தில் (NநுடுளுஐP) 196 லட்சம் ரூபா நிதியில் 13.11.2013ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 20.12.2015ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இம் மீன் சந்தை கட்டிடத் தொகுதி அரசியல்வாதிகளின் இழுபரிக்கிடையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

16முப்பத்தொரு (31) கடைத்தொகுதிகளைக் கொண்ட மீன் சந்தைக் கட்டிடத்தின் மூலம் மாதாந்தம் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஒரு லட்சத்தி ஐமப்த்தையாயிரம் ரூபா வருமானம் கிடைக்கவுள்ளதாகவும் அரசியல்வாதிகளின் தலையீட்டால் இவ் மீன் சந்தை கட்டிடத்தொகுதி கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாக திறக்கப்படாமல் இழுபரி நிலையில் இருந்ததால் பிரதேச சபை ஒரு வருடத்திற்கான வருமானமாக பதினெட்டு லட்சத்தி அறுபதாயிரம் ரூபாவினை மீன் சந்தை கடைத் தொகுதி மூலம் இழந்துள்ளது என்று ஓட்டமவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சாபி தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதியுமான கே.பி.எஸ்.ஹமீட் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இருந்து விழகி ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸில் இணைந்து கொண்டதாக அறிவித்தார்.

06 19 13 09 08

LEAVE A REPLY