கிழக்கு முதலமைச்சரின் முயற்சியினால் தச்சு தொழில் பயிற்சி நிலைய காணி உரிமையளரிடம் கையளிப்பு

0
257

(அஹமட் இர்ஷாட்)

02வாழைச்சேனை ஹைராத் வீதியில் அமைந்துள்ள தச்சுத் தொழில் பயிச்சி நிலைய காணியானது நீண்டகால முயற்சிகளுக்கு பிற்பாடு அதன் உரிமையாளரான முஹம்மது முஸ்தபா அலி அன்சார் என்பவரிடம் உத்தியோகபூர்வமாக கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் நிகாரா மவ்ஜூத்தினால் இன்று (22) கையளிக்கப்பட்டது.

இக்குறிப்பிட்ட கானியானது 1966ம் ஆண்டு 25 வருட கால குத்தகைக்கு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கொடுக்கப்பட்டு கிராமிய தொழில் துறை திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் குறித்த 25 வருட குத்தகை கால பகுதியானது 1991ம் ஆண்டு முடிவடைந்திருந்தும் சுமார் 25 வருடகாலமாக காணி உரிமையாளரிடம் கொடுக்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்தது.

காணியின் உரிமையாளரான அலி அன்சார் குறித்த காணி விடயமாக மாவட்டத்திலுள்ள சகல அரசியல்வாதிகளினதும் உதவிகளை நாடியிருந்தும் எந்த வித நடவடிக்கைகளும் குறித்த காணியினை உரிமையாளரிடம் கையளிப்பதற்காக மேற்கொள்ளப்படவில்லை.

அந்த நிலையிலே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் உதவியினை நாடியிருந்த நிலையில் முதலமைச்சரினால் கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டு கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியத்தினால் ஏகமானதாக முடிவெடுக்கப்பட்டு குறித்த காணியானது சுமார் 25 வருடங்களுக்கு பிற்பாடு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இக்காணி உரிமையாளரிடம் சட்டரீதியாக கையளிக்கப்பட்ட விடயம் சம்பந்தமாக கருத்து தெரிவித்த காணி உரிமையாளர் தனது மனமார்ந்த நன்றியினை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிற்கு தெரிவித்தார்.

01

LEAVE A REPLY