தமிழ் கற்றுத்தர வருகிறது புதுவித ஆப்ஸ்

0
92

tumblr_m3szcvcxO21qgdwfno1_500குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் விதமாக 247 தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் மற்றும் அவற்றை உச்சரிக்கும் ஆடியோக்களுடன் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

மொபைல் போனின் ஸ்க்ரீனிலேயே எழுத்துக்களை அழிக்கவும், சரியாக எழுதவும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய கல்வித்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் பக்தாச்சலம் கூறுகையில், தமிழகத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் 40 சதவீதம் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை சரியாக கண்டறிய தெரியாதவர்களாகவும், அவற்றை சரியாக உச்சரிக்க தெரியாதவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது, கூகுள் பிளேஸ்டோரில் யூலை 4ம் திகதி முதல் ரூ.50 க்கு இந்த ஆப்சை பெறலாம்.

இந்த புதிய ஆப்ஸ்க்கு சுட்டி தமிழ் அறிச்சுவடி என பெயரிடப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு அவர்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும், தமிழ் கற்றுத்தர அவர்களுக்கு தேவையான வசதிகளை இந்த ஆப்ஸ் மூலம் செய்து தரவும் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY