மேக்ஸ்வெல் ஆட்டத்தை பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை: மிட்சேல் மார்ஷ்

0
12

201606221653410605_Free-spirit-Glenn-Maxwells-late-flourish-leaves-Mitchell_SECVPFவெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. பார்படோசில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்தது.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 15 புள்ளியுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் சுமித் 78 ரன்களும், ஆல்ரவுண்டர் மிட்சேல் மார்ஷ் 79 ரன்களும் எடுத்தார்கள். ஆனால் மேக்ஸ்வெல் 26 பந்துகளில் அடித்த 46 ரன்கள் தான் அந்த அணி வெற்றி பெற உதவியது.

இந்த போட்டிக்குப் பிறகு மேக்ஸ்வெல் ஆட்டம் குறித்து பேசிய மிட்செல் மார்ஷ், “மறுமுனையில் இருந்துக்கொண்டு இது போல் ஒரு இன்னிங்சை பார்த்தபோது உண்மையில் எனக்கு பேச்சே வரவில்லை. மேக்ஸிக்கு தன் மீது நிறைய சந்தேகம் இருந்தது, அவர் சிறந்த பார்மிலும் இல்லை. ஆனால் அவர் ஏன் முதலில் ஆஸ்திரேலியா அணிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பதை அவரது இன்றைய ஆட்டம் காண்பிக்கிறது.

அவர் மிகவும் ஆபத்தான வீரர். ஒரு சில ஓவர்களில் போட்டியை வெல்லும் திறமைக் கொண்டவர். மேக்ஸி ஒரு சுதந்திரமான ஆன்மா. அவரை அவர் விருப்பத்திற்கு விளையாட அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY