வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வட்டியில்லா கடன் சேவை

0
165

(முஹம்மட் பயாஸ்)

WhatsApp-Image-20160622 (1)காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் மாதர் அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கிலும் சுய தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்காகவும் வட்டியில்லா கடன் உதவிகள் இன்று (22) புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் 23 பயனாளிகளுக்கு ஒருவருக்கு தலா 30,000 ரூபா வீதம் கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. இது 2ம் கட்டமாக 2 கிராம அலுவலர் பிரிவுகளான 167C மற்றும் 167 B ஆகிய பிரிவுகளுக்கே வழங்கி வைக்கப்பட்டது.

இத்தொகையினை பயனாளிகள் 10 மாத காலத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம். முஸம்மில், கெளரவ அதிதியாக உதவி பிரதேச செயளாலர் ஏ.சீ.அஹமட் அப்கர், இன்னும் கிராம உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாறான கடனுதவிகளை வழங்கி வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவற்கான பணிகளை அர்ப்பனிப்போடு செயற்படுத்தி வருகின்ற காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கும் மாதர் சங்கங்களுக்கும் பயனாளிகளினால் நன்றி நவிலல்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp-Image-20160622 (2) WhatsApp-Image-20160622 (3) WhatsApp-Image-20160622

LEAVE A REPLY