ஐரோப்பிய கால்பந்து தொடரில் வன்முறையில் ஈடுபட்டதாக 557 ரசிகர்கள் அதிரடி கைது!

0
94

_75699424_football4ஐரோப்பிய கால்பந்து தொடரின் போது வன்முறையில் ஈடுபட்டதற்காக 557 கால்பந்து ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் ஐரோப்பிய கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதற்காக உலக முழுவதும் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரான்ஸில் கூடியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 12ம் திகதி நடந்த இங்கிலாந்து- ரஷ்யா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இவ்விரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டது.

அத்துடன் அவர்கள் மைதானத்திற்குள்ளும் மோதலில் ஈடுபட்டனர். சில முக்கியமான போட்டிகளிலும் ரசிகர்கள் மோதல் இருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார் பல ரசிகர்களை கைது செய்தனர்.

இதில் இரண்டு ரஷ்ய ரசிகர்களுக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சில ரசிகர்கள் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதில் 30 இங்கிலாந்து ரசிகர்களும், 7 வடக்கு அயர்லாந்து ரசிகர்களும், 5 வேல்ஸ் ரசிகர்களும் அடங்குவார்கள்.

இந்த நிலையில் ஐரோப்பிய தொடர் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் இதுவரை 557 ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY