பின்தங்கிய 35 பள்ளிவாசல்களில் 3500 பேருக்கு நோன்பு துறக்க ஏற்பாடு

0
13

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC05556காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் பின்தங்கிய கிராமங்களில் உள்ள 35 பள்ளிவாசல்களில் சுமார் 3500 பேருக்கு புனித றமழான் காலத்தில் நோன்பு துறக்கும் ஏற்பாடுகளுக்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தனது சொந்த நிதியை ஒதுக்கியிருப்பதாக முதலமைச்சரின் தொடர்பாளர் யூ.எல். முஹைதீன்பாவா தெரிவித்தார்.

இதன்படி ஏறாவூர் பிரதேசத்தில் 20 பள்ளிவாசல்களிலும், காத்தான்குடியில் 8 பள்ளிவாசல்களிலும், ஓட்டமாவடி வாழைச்சேனைப் பிரதேசங்களில் 6 பள்ளிவாசல்களிலும் இந்த நோன்பு துறக்கும் நிகழ்வு இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

DSC05560

LEAVE A REPLY