மாணவி பாலியல் சேஷ்டை குற்றச்சாட்டு: காத்தான்குடி இளைஞர் பிணையில் விடுதலை

0
170

(விஷேட நிருபர்)

Kattankudy Remand Courtகாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் மாணவியொருவரை பாலியல் சேஷ்டை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த காத்தான்குடி இளைஞர் ஒருவர் நேற்று (21) செவ்வாய்க்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞர் மீது இரண்டு குற்றச்சாட்டின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் மாணவியொருவரை பாலியல் சேஷ்டை செய்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் சரீரப் பிணையும் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டுக்காக இரண்டு பேர் சரீரப் பிணையிலும் இவர் பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் கடந்த 02.06.2016 பிரத்தியேக வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியொருவரை பின் தொடர்ந்து அவ்வழியினால் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த இவ் இளைஞர் குறித்த மாணவியின் பின் பகுதியில் கையினால் தட்டி விட்டு சென்றார் எனும் குற்றச்சாட்டிலும் மற்றும் இவர் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டிலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY