ஆளுநர் தலையீடு அபிவிருத்திக்குப் பாரிய பின்னடைவு: கிழக்கு முதலமைச்சர்

0
169

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Eastern CM Nazeer Ahamedஆளுநர் தலையீடு கிழக்கு மாகாண அபிவிருத்திக்குப் பாரிய பின்னடைவாக இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 60ஆவது அமர்வு சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே முதலமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,

‘கிழக்கு மாகாண சபையினால் இப்பொழுது ஆளுநரின் தலையீடு இருப்பதன் காரணமாக எந்த சேவையினையும் சரியாகச் செய்ய முடியாத சூழ்நிலையுள்ளது.

எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவேண்டியுமுள்ளது.

ஆனால் அவற்றை மேற்கொள்ளவோ கிழக்கில் இருக்கும் பட்டதாரிகள் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கவோ ஆளுநர் ஆதரவு வழங்காமல் முடக்கிவிட்டிருப்பது மாகாண சபையின் ஆட்சியினைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

இலங்கையில் இருக்கும் சகல மாகாணங்களின் முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் அவர்களின் சேவைகளைச் செவ்வனே செய்து கொண்டு போகும்போது கிழக்கில் மட்டும் ஆளுநரின் தலையீட்டால் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

1இன்று நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவும் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப முயற்சித்துக் கொண்டிருக்கையில் கிழக்கு ஆளுநரின் இவ்வாறான எதேச்சாதிகாரம் நல்லாட்சியை கிழக்கில் வீழ்த்திவிடும் நிலை உருவாகும் என்ற அச்சமும் ஏற்படுள்ளது.

எனவே கிழக்கின் அபிவிருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க ஆளுநர் முன்வர வேண்டும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் என்ற வகையில் நான் இந்த விடயத்தைத் தெரிவித்திருக்கிறேன்’ என்றாரவர்.

LEAVE A REPLY