இறுதிப் பந்தில் 6 ஓட்டம்; இலங்கைக்கு ஏமாற்றம்; போட்டி சமநிலை

0
115

slveng-1st-odi-tied-on-last-ball-six-3இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் நேற்று நோட்டிங்ஹமில் (21) இடம்பெற்ற முதலாவது போட்டி வெற்றி தோல்வி இன்றி சமனிலையில் முடிவடைந்துள்ளது.

குறித்த போட்டியின் இறுதி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு 14 ஓட்டங்கள் தேவை என்றிருந்தது.

இந்நிலையில் 5 பந்துகளில் 7 ஓட்டங்கள் ( 2, 1, 1, 0, 3) பெறப்பட்டிருந்த நிலையில் நுவன் பிரதீப் வீசிய இறுதிப் பந்தில் 6 ஓட்டங்களை பிளங்கட் பெற்றுக் கொடுத்ததன் மூலம் போட்டி சமநிலையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

slveng-1st-odi-tied-on-last-ball-six-218 ஆவது ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிய இங்கிலாந்து அணி இவ்வாறு போட்டியை சமநிலைப்படுத்தியமை, அவ்வணி வெற்றி பெற்றமைக்கு சமன் என்பதை, இறுதிப் பந்தில் பெற்ற 6 ஓட்டங்களின்போது, அவ்வணியின் ரசிகர்கள் கொண்டாடியிருந்தமை மூலம் அவதானிக்க முடிந்தது.

இதில் 7 ஆவது விக்கெட்டுக்காக ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் பெற்ற 138 இணைப்பாட்டம் அவ்வணிக்கு பாரிய வலுவைச் சேர்த்தது.

நாணய சுழற்சி: இங்கிலாந்து வெற்றி

இலங்கை : 286/9 (50.0)
– அஞ்சலோ மெத்திவ்ஸ் 73
– சீக்குகே பிரசன்ன 59
– பர்வீஸ் மஹ்ரூப் 31*

கிறிஸ்வோக்ஸ், டேவிட் வில்லி, லையம் பிளங்கட் தலா 2 விக்கெட்டுகள்

இங்கிலாந்து : 286/8 (50.0)
– கிறிஸ் வோக்ஸ் 95*
– ஜோஸ் பட்லர் 93
– லையம் பிளங்கட் 22*

ஆட்ட நாயகன் : கிறிஸ் வோக்ஸ்

தொடர் : 0 – 0

slveng-1st-odi-tied-on-last-ball-six-1

LEAVE A REPLY