ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை

0
172

151231114258_thoma_2903279hகடந்த வாரம் உலக தடகள வீர்ர்களின் நிர்வாக அமைப்பு எடுத்து முடிவை ஆதரித்து, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ரஷிய தடகள வீரர்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்காக முன்னதாகவே ரஷிய தடகள விளையாட்டு வீரர்கள் அரச ஆதரவில் ஊக்கமருந்து பெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆனால், ரஷிய தடகள வீரர்கள் ரியோ ஒலிம்பிக்கில் போட்டியிட தகுதியனவர்கள் என்று அவர்களின் சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் அறிவிக்கப்படலாம் என்றும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக ரஷியா அறிவித்துள்ளது.

-BBC-

LEAVE A REPLY