அனுபவசாலிகளை இழப்பது சமுதாயத்துக்கு ஏற்படும் பாரிய இழப்பாகும் : முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர்

0
147

(எம்.எஸ்.எம். சாஹிர்)

dde60e70-02d2-4e24-9394-6f1e481bd16eபழமைமிக்க அனுபவசாலிகளை இழப்பது சமுதாயத்துக்கு ஏற்படும் பெரும் இழப்பாகும் என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தர்.

வை.எம்.எம்.ஏ மற்றும் லயன்ஸ்கழக கொழும்பு மாவட்டத் தலைவர் அஸ்ரப் ஹுசைன் கடுமையாகச் சுகவீனமடைந்திருப்பதனால் அவருக்குத் தேகாரோக்கியம் பெற வேண்டி கொழும்பு -07 சுல்தான் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட துஆப் பிராத்தனை மற்றும் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போது முன்னாள் அமைச்சர் கூறினார் .

தினகரன் ஆலோசகர் நிலாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர்,

சம காலத்தில் வாழ்ந்த பெரும் தலைவர்களை நாம் இழந்து தவிக்கின்றோம். முன்னாள் அமைச்சர் கம்பளை ஏ.ஆர்.எம். அப்துல் காதர் மறைவுக்குப் பின்பு முஸ்லிம்களின் தலைவராக விளங்கிய எம்.எச் முஹம்மட் அதன் பிறகு செனட்டராக இருந்த பிரபல பேச்சாளர் எஸ்.இஸட்.எம் மஷுர் மௌலானா அதன் பிறகு முன்னாள் ஆளுனரும் தொழிற்சங்கவாதியுமான அலவி மௌலானா போன்ற தலைவர்களை நாம் இன்று இழந்திருக்கின்றோம்.

அஸ்ரப் ஹுசைன் நல்ல சமூகவாதி. சமூக நலன் பேணியவர். இல்லாதவருக்கு தேடிச் சென்று உதவியவர். அது மட்டுமல்ல, இந்த நாட்டிலே முதன் முதலாக ஜனாஸா வாகனத்தை ஆரம்பித்தவரும் அவரே. பொதுமக்களின் நலன் கருதி அதைச் செய்தார். வாமி போன்ற இயக்கங்களை உருவாக்குவதில் துணை நின்றார். அதுமட்டுமல்ல, அவருடைய தந்தை எஸ். பி.எம். ஹுசைன் (பாட்சா) க்கும் எனக்கும் நல்ல நெருங்கிய தொடர்புண்டு. அவர் டி.பி.ஜாயாவோடு ஒன்றுசேர்ந்து சமுதாயத்துக்காக வேண்டியும், கொழும்பு சாஹிராக் கல்லூரியை மீளப் பெறுவதற்காக வேண்டியும் அதை சமூக சொத்தாக மீளப் பெறுவதற்காக வேண்டியும் போராடியவர்களில் ஒருவர்.

அரும்பாடு பட்டு உழைத்த அஸ்ரப் ஹுசைனுக்கு இறைவன் நல்ல சிபா (ஆரோக்கியம்) வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டிக் கொண்டார். நிகழ்வில், துஆவை காத்தான்குடி மௌலவி செய்யது முஹம்மது முஸ்தபா ஆலிம் இறைஞ்சினார்.

ஏற்பாடுகளை அஸீஸ் மன்றத் தலைவர் அஷ்ரப் அஸீஸ் மேற்கொண்டார். இந்நிகழ்வில், அண்மையில் காலஞ் சென்ற முகத்துவாரத்தைச் சேர்ந்த புரவலர் பாயிக் மக்கீன் மறைவையொட்டி துஆப் பிராத்தனையும் நிகழ்த்தப்பட்டது. ஊடகவியலாளர்கள் பலரும் இதல் கலந்து கொண்டனர்.

படம் – அஷ்ரப் ஏ.சமத்

LEAVE A REPLY