ஜப்பானில் வெள்ளம்: குறைந்தது மூவர் பலி

0
139

அண்மையில் ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், இதுவரை இல்லாத அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு குமாமோட்டோ பகுதியில் காணாமல் போயுள்ள மேலும் மூன்று பேரை, மீட்புப் பணியாளர்கள் தேடி வருவதாக ஜப்பான் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்குள் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட இரண்டு மிகப் பெரிய பூகம்பங்களினால் 49 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏறக்குறைய 2000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

-BBC-

LEAVE A REPLY