மலேஷியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை

0
95

imageமலேஷியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவையினது மலேஷிய பிரதிநிதி ரிச்சட் டொவேல் தெரிவித்துள்ளார்.

தற்போது அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள் போலியாக அச்சிடப்படும் நிலை காணப்படுகின்றது. இந்தநிலையில் உயிரணுவியல் மற்றும் வானலை அடையாள அட்டைகளை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடையாள அட்டைகள் பொருளாதார நோக்கில் மலேஷிய வந்தவர்களுக்கு வழங்கப்படாதென்றும், நேர்மையான அகதிகளுக்கு மாத்திரமே வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY