(Poem) பேச்சு மொழி

0
9

(நிஷவ்ஸ்)

கிழக்கிலங்கை ஊர்களில்
புழக்கத்தில் இருந்து
வழக்கிழந்து போன சொற்கள்
வகைவகையாய் உண்டு.

புழக்கடை என்பது
புழக்கத்தில் இல்லை
அலக்கா என்பதும்
அப்பிடியே போயிற்று.
உளக்குதல் எனும் சொல்லும்
உபயோகத்தில் இல்லை
அளப்புற என்பதும்
அதிகம் நீங்கிடிச்சு.

ஒண்ணா என்பது
என்னென்று கேட்கிறார்
மண்ணாங் கட்டியும்
மாறிட்டு வருகிறது
அன்னா என்று
அதோ என்பதை
சொன்னதும் இப்போ
சுத்தமாய் இல்லை.

நெக்கு என்பது
நிற்காத சொல்லாச்சு
அக்குளுக் குத்துற
அக்கால சொல்லாச்சு
மக்கு எனும் சொல்லும்
மறைந்து வருகிறது
டக்கென்ற சொல்லும்
டக்கென்று மாறுது.

ஒள்ளுப்பம் என்பதும்
உள்ளூடு என்பதும்
கொள்ளயா என்பதும்
கெல்லுதல் என்பதும்
இல்லாது போக
இங்லிஸ் சொற்கள்
மெல்லக் கலந்து
மிகைத்து வருகிறது.

LEAVE A REPLY