ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஹமீட் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தது உண்மையா?

0
212

(எம்.ரீ.எம். பாாிஸ்)

Hameed Hafiz Naseerஅகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சியின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் இன்று (21) செவ்வாய்க்கிழமை சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் உத்தியோக பூர்வமாக கட்சியின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அஹமட் முன்னிலையில் திருகோனமலை உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து இணைந்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த செய்தியை அறிந்து அது தொடர்பாக முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட்டை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், “இன்று நான் முதலமைச்சரை சிநேகபூர்வமாக சந்திந்து உரையாடினேன்” என்றார்.

கட்சி மாறுவது பற்றிய தகவல் உண்மையா? என கேட்டபோது, “அவ்வாறு ஒன்றும் இல்லை. எதிர்கால அரசியல் பற்றி பேசியுள்ளேன். மேலும், சில கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளேன். அது நிறைவேற்றப்படும் சந்தர்பத்தில் காட்சி மாறுவது பற்றி சிந்திப்பேன்” என்றார்.

02 03

LEAVE A REPLY