சுசந்திக்கா வேறு நபருடன் வீட்டில் தனிமையில் இருந்தார்: கணவர் தெரிவிப்பு

0
297

Susanthika-Jayasingheசுசந்திக்கா வேறு நபருடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். நான் வீட்டுக்கு வந்தபோது குறித்த நபர் பின்புறமாகவும் சுசந்திக்கா முன்புறமாகவும் மதில் பாய்ந்து ஓடி விட்டனரென சுசந்திக்காவின் கணவர் தம்மிக நந்தகுமார தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“இதுவொரு தனிப்பட்ட விடயம் என்பதால் எனக்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் எண்ணமிருக்கவில்லை.

இருந்தாலும் சுசந்திக்கா இல்லாததொன்றை உண்மையாக்கி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு அனுதாபத்தை பெற்றுக்கொள்ளவே சுசந்திக்கா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

வலிவேரியாவிலுள்ள வீட்டுக்கு சுசந்திக்கா வரவேண்டிய தேவையில்லை. குறித்த வீடு அக்காவின் மகளுக்கு கட்டியதாக சொல்லுகின்றனர். அதனால் இங்கு வரவேண்டிய தேவை அவருக்கு இருக்கவில்லை.

3 மாதங்களுக்கு முன்னர் அவர் இன்னொரு நபருடன் இருந்த நிலையில் பிடிபட்டு பொரளை பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து நாமிருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்தததையடுத்து அந்த சம்பவம் சமாதானமாக கைவிடப்பட்டது.

3 மாதங்களுக்குப்பின்னர் கடந்த 17 ஆம் திகதி இரவு இடம்பெற்ற சம்பவம் வேறு. அன்று அவர் வேறு ஒரு நபருடன் தனிமையில் வீட்டில் ஒன்றாக இருந்துள்ளார்.

நான் அங்கு வந்தபோது, அந்த நபர் வீட்டின் பின்புறமாகவுள்ள மதிலால் பாய்ந்து ஓடிச்சென்றுள்ளார். சுசந்திக்கா வீட்டின் முன் கதவைத் திறந்து எனக்கு ஏசிவிட்டு முன்பக்கமுள்ள மதிலால் பாய்ந்து ஓடி விட்டார்.

அவர் மதிலால் பாய்ந்து நேராக பொலிஸ் நிலையத்திற்குத் தான் ஓடிச்சென்றுள்ளார். தற்போது அவர் காட்டமுற்படும் காயங்களும் கீறல் காயங்களும் மதிலால் பாய்ந்தோடும் போது ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம்.

இதன் பின்னர் அவர் பொலிஸாரையும் அழைத்துக்கொண்டு வந்தார். சம்பவத்தின் போது பாய்ந்தோடிய நபரின் ஆடை பையையும் அடையாள அட்டையையும் நான் எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளேன்.

அதனை விசாரணைசெய்து நீதிமன்றம் நியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுசந்திக்கா என்பவர் பெரியளவில் பேசப்பட்ட ஒரு ஓட்ட விராங்கனை என்பதால் சம்பவத்தை மூடிமறைத்து அநுதாபம் தேடும் நோக்குடன் கருத்துத்தெரிவித்து வருகின்றார்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுசந்திக்கா ஜயசிங்க கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் போது கருந்துத் தெரிவிக்கையில்,

“இன்றைய சம்பவம் எனக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் மனதில் மறைத்து வைத்திருந்த விடயம் இன்று முழு நாட்டிற்கும் தெரியவந்துள்ளது.

எனவே எனது கணவரிடம் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்.

இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றது தொடர்பில் கவலையடைகின்றேன். இதுவரை காலமும் பல விடயங்களை மனதில் மறைத்து வைத்திருந்தேன். ஆனால் இன்று முழு நாட்டுக்கும் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இது எனக்கு மிகவும் அவமானமாக உள்ளது.

நானும் சில தவறுகளை செய்திருக்கின்றேன். அவ்வாறு தவறுகள் செய்திருந்தால் தண்டனை அனுபவிக்கவும் தயாராக உள்ளேன். இந்த சம்பவம் இலங்கையிலுள்ள ழுமு பெண்களுக்கும் ஒரு பாடமாகும்.

நல்ல கணவர் மனைவியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

எனினும் எனது கணவரிடம் இருந்து விடுதலை வேண்டும். என்னை பத்து வருடம் சிறையில் அடைத்தாலும் நான் அடைந்த துன்பங்களுக்கு நிச்சயம் விடிவு கிடைக்கும். இதற்கான சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் முன்னெடுப்பேன் என ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க தெரிவித்திருந்தார்.

தடகள வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க, தனது வீட்டில் வைத்து தாக்குதலுக்குள்ளானதையடுத்து வைத்தியசாலையில் கடந்த 18 ஆம்திகதி அதிகாலை அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#Virakesari

LEAVE A REPLY