யாழில் மாணவி துஷ்பிரயோகம்: அதிபர், பிரதி அதிபர், ஆசிரியைகள் உட்பட ஐவர் கைது

0
164

Women child abuseசிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பகுதி பாடசாலை ஒன்றின் அதிபர், பிரதி அதிபர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் 11 வயது மாணவியாவார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர் ஒருவர் மற்றும் இரண்டு ஆசிரியைகளும் கைதுசெய்யப்பட்டு, நேற்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பாடசாலை முடிந்து மேலதிக வகுப்புகள் நடைபெற்ற வேளை, பல சந்தர்ப்பங்களில் குறித்த சிறுமியை, 46 வயதுடைய சந்தேகநபரான ஆசிரியர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக, முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது நண்பர்களிடம் முன்னதாக தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் அப் பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியைகளிடமும் முறையிட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் மூவரும் இந்த சம்பவத்தை மறைக்க முற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதுஇவ்வாறு இருக்க, தனது மகளுக்கு ஏற்பட்ட அநீதியை அறிந்த பெற்றோர், இது தொடர்பில் அப் பாடசாலை அதிபரிடம் கூறிய போதும், அவர் பாடசாலைக்கு அகௌரவம் ஏற்பட்டு விடும் எனக் கருதி, சந்தேகநபரான ஆசிரியரை தற்காலிகமாக பிரிதொரு பாடசாலைக்கு மாற்ற முயற்சித்ததாகவும், கூறப்படுகின்றது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான ஆசிரியர் மற்றும் அவருக்கு உதவியதாக கூறப்படும் அதிபர், பிரதி அதிபர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவர்களை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி ஶ்ரீமதி நந்தசேகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

#Adaderana

LEAVE A REPLY