மொஹமட் அமீருக்கு பூரண ஆதரவளிக்கப்படும் – வஹாப் ரியாஸ்

0
148

mohammadamir_CIபாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீருக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என சக வீரர் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார்.

அமீரை, அணி வீரர்கள் இளைய சகோதரராகவே பார்க்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மாதம் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அமீர் பங்கேற்க உள்ளார்.

ஆறு ஆண்டுகள் இடைவெளியின் பின்னர் மீளவும் டெஸ்ட் கிரிக்கட் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தமை மிகப் பெரிய அதிர்ஸ்டம் தெரிவித்துள்ளார்.

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக அமீருக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை போட்டித் தடை விதித்திருந்தது.

எந்த மைதானத்தில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டு போட்டித் தடை விதிக்கப்பட்டதோ அதே லோர்ட்ஸ் மைதானத்தில் அமீர் மீளவும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY