கம்மன்பிலவுக்கு வீட்டிலிருந்து உணவு

0
79

Uthaya_CIஆவண மோசடி செய்து சொத்துக்களை அபகரித்துக்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சிறைச்சாலை உணவு வகைகளை நிராகரித்துள்ளார்.

நேற்று முதல் வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொண்டு உட்கொண்டு வருகின்றார். கடந்த 18ம் திகதி முதல் நேற்று முற்பகல் வரையில் சிறைச்சாலை உணவை உதய கம்மன்பில உட்கொண்டார்.

எனினும், தொடர்ந்தும் சிறைச்சாலை உணவை உட்கொள்ள முடியாது எனவும் வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறும் உதய கம்மன்பில விடுத்த கோரிக்கையை சிறைச்சாலை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உறங்குவதற்கு பாய் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் மகசீன் சிறைச்சாலையின் ஈ வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உதய கம்மன்பிலவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ET-

LEAVE A REPLY