முன்னாள் நீதவான் திலினவுக்கு பிணை

0
141

1thilanaகொழும்பு, புதுக்கடை முன்னாள் நீதவான் திலின கமகேவை, பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக தன்னகத்தே வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட திலின கமனே, அண்மையில் கங்கொடவில நீதிமன்றத்தில் சரணடைந்ததோடு, பின்னர் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், இது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் மீளாய்வு மனுவொன்று கடந்த 13ம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், கங்கொடவில நீதிமன்றத்தால், திலின கமகேவுக்கு வழங்கப்பட்ட பிணை அனுமதியை இரத்துச் செய்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால், திலின கமகேவின் பிணை அனுமதி தற்காலிகமாக இரத்துச் செய்து, உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த இடைக்காலத் தடை உத்தரவை தெளிவுபடுத்தக் கோரி, திலின கமகேயினால் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 17ம் திகி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை தெளிவுபடுத்த கூறி மனுத்தாக்கல் செய்வது சட்ட விரோதமானது என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி திலீப பீரிஸ் இதன்போது கூறினார்.

இந்தநிலையில் குறித்த மனு மீளப் பெறப்பட்டதுடன், எதிர்வரும் 21ம் திகதி (இன்று) மீண்டும் திலின கமகேவை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி இன்று அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

-ET-

LEAVE A REPLY