மூதூரில் நடை பெற்ற NFGG யின் இப்தாரும்,ஒன்று கூடலும்!

0
211

18b700f8-b1b7-43aa-b2b1-04a485a91cdaநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்(NFGG) திருகோணமலை பிராந்தியக் குழு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வுடன் கூடிய மக்கள் சந்திப்பொன்று நேற்று (19.06.2016) மூதூரில் நடைபெற்றது.

மூதூர் Safe Rest Inn இல் நடைபெற்ற நிகழ்வினை NFGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினரான Dr.KM. சாகீர் தலைமை தாங்கி நடாத்திய அதே வேளை , NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் விசேட அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மூதூர், கிண்ணியா, கந்தளாய், தோப்பூர் உள்ளிட்ட திருகோணமலையின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த 500க்கும் அதிகமான NFGG யின் ஆதரவாளர்களும், பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில்NFGG யின் தலைமைத்துவ சபையின் உறுப்பினரான பொறியியலாளர் பழ்லுல் ஹக் அதன் காத்தான்குடி பிராந்திய சபை உறுப்பினர்களான அஷ்செய்க் AL சபீல் நழீமி, MAM பைசர் , MYM சரீப், MM அன்ஸார் மற்றும் M.நழீம் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது சபீல் நழீமியினால் மார்க்க உபன்னியாசமும், Dr. சாகிரினால்  உரையொன்றும் ஆற்றப்பட்டது.

இப்தார் நிகழ்வினைத் தொடர்ந்து NFGG யின் மூதூர் பிரதேச பிரமுகர்களுடனும், இளைஞர் அணியுடனும் இரு வேறு கலந்துரையாடல்களும் நடை பெற்றன. எதிர்வரும் காலங்களில் மூதூர்ப் பிரதேசத்தில் NFGG யினால் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

2698186b-a58c-4fca-977f-aa14121fbb9e

LEAVE A REPLY