கம்மன்பிலவை பார்வையிடச் சென்ற கலபொடத்தே ஞானசார தேரர்

0
144

Uthaya_CIபாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பார்வையிடுவதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில் உதய கம்மன்பில தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களும் உதய கம்மன்பிலவை பார்வையிடச் சென்றுள்ளனர்.

தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, டலஸ் அழப்பெரும, குமார வெல்கம, காமினி லொக்குகே, மஹிந்த யாபா அபேவர்தன, பிரசன்ன ரணவீர, சிசிர ஜயகொடி, செஹான் சேமசிங்க மற்றும் கனக ஹேரத் போன்றவர்கள் உதய கம்மன்பிலவை இன்று பார்வையிட்டுள்ளனர்.

போலி அட்டர்னி பத்திரமொன்றை பயன்படுத்தி மோசடி செய்ததாக உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY