( Poem) இப்தார்

0
8

கஞ்சப் பார்த்தேன் சமுசாவைப் பார்த்தேன் -இப்தாரில்
கெஞ்சப் பார்க்கலியே
பல மணி பசியில் இருந்தும்
சில செக்கன் துஆவுக்குப் பொறுக்கார்.
உள்ளே போகும் அத்தனையும்
ஒத்துக்காது இருந்தாலும்
வெளியில் ஏதும் மிஞ்சாது
வேட்டையாடி முடிப்பாரே.
ஒரு கோப்பையில் இருக்கும் கூல் ட்ரிங்க்ஸு
மறு கோப்பையில் இருக்கும்
பால் தேனீர்
உம்மா செய்த சோட்டீட்ஸ்கள் ஒரு தட்டிலாம்.
புட்சிட்டி சென்று கொண்டு வந்த
புறுட்டும் யோகட்டும் மறுதட்டில்
பிஞ்ச சொப்பிங் போலாகும்
பெரிய வயிறுகள்.
சுட றால் வடையும் திண்டு
சுணங்கி மக்ரிப் தொழுவார் இங்கு.
சுட றால் வடையும் திண்டு
சுணங்கி மக்ரிப் தொழுவார் இங்கு.
கொஞ்சம் போல உணவருந்தி
கெஞ்சி இறையிடம் கையேந்தி
அஞ்சி அழுது துஆக் கேட்போர்
ஆகக் குறைவம்மா.
மிஞ்சிய உணவை வீசுகிறார்
நெஞ்சு கரிப்பதாய் ஏசுகிறார்.
செஞ்ச வேலை சரிதானா
கொஞ்சம் சிந்திப்பாய்.
அட ஆடம்பரம் மறுப்போம்
அழகாய் நோன்பைத் துறப்போம்.
அட ஆடம்பரம் மறுப்போம்
அழகாய் நோன்பைத் துறப்போம்.

(நிஷவ்ஸ் )

LEAVE A REPLY