மழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

0
17

imageஇந்தோனேசியா நாட்டில் உள்ள மத்திய ஜாவா மாகாணத்துக்குட்பட்ட 16 தாலுகாக்களில் கடந்த 48 மணிநேரமாக கனத்த மழை பெய்து வருகிறது. மழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

மணல்பாங்கான பகுதிகளை வெள்ள நீர் அரித்துச் சென்றதால் ஏற்பட்ட நிலச்சரிவுக்குள் பாறைகளுக்கு அடியில் பல வீடுகள் சிக்கியுள்ளன. குறிப்பாக, புர்வோரெஜோ மாவட்டத்தில் மட்டும் மழைசார்ந்த விபத்துகளுக்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் நூறு பேரை தேடும் பணியில் மீட்புப் படையினருடன், ராணுவம், காவல்துறை மற்றும் உள்ளூர்களை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY