பாத்யா மாவத்தை பள்ளிவாசல் : விஸ்தரிப்பு இடைநிறுத்தம்

0
188

pathiya palliதெஹி­வளை பாத்யா மாவத்தை பெளசுல் அக்பர் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணிகள் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்­கா­வுடன் முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கலந்­து­ரை­யா­டி­ய­தை­ய­டுத்து பள்­ளி­வா­சலில் விஸ்­த­ரிப்பு பணிகள் கடந்­த­வாரம் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

ஆரம்­பிக்­கப்­பட்ட வேலைகள் தற்­போது நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

ரமழான் மாதத்தில் பள்­ளி­வாசல் அமைந்­தி­ருக்கும் பிர­தே­சத்தில் விஸ்­த­ரிப்பு பணி­களைக் காரணம் காட்டி முரண்­பா­டுகள் தோற்­று­விக்­கப்­ப­டா­ம­லி­ருப்­ப­தற்கும், நல்­லி­ணக்­கத்­தையும், பெரும்­பான்­மை­யி­ன­ரு­ட­னான உற­வி­னையும் பலப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வுமே தற்­கா­லி­க­மாக பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணிகள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெஹி­வளை கல்­கிசை பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் மொஹமட் யூசுப் விடி­வெள்ளி க்குத் தெரி­வித்தார்.

விஸ்­த­ரிப்பு பணிகள் பிர­தேச பெரும்­பான்மை மக்­க­ளி­னது நல்­லு­றவைப் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கா­கவே நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. ரம­ழானின் பின்பு வேலைகள் ஆரம்­பிக்­கப்­படும் என்றார்.

பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விஸ்­த­ரிப்­புக்­காக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை­யி­ட­மி­ருந்து பள்­ளி­வாசல் நிர்­வாகம் சட்­ட­ரீ­தி­யான அனு­ம­தியைப் பெற்­றி­ருந்­தாலும் அப்­ப­குதி குரு­மார்கள் இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து தெஹி­வளை கல்­கிசை மேயர் விஸ்­த­ரிப்பு பணி­களை தற்­கா­லி­க­மாக நிறுத்­திக்­கொள்ளும் படியும் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார். பொலி­ஸாரும் அழுத்­தங்­களைப் பிறப்­பித்­தனர். நிர்­வா­கங்­க­ளையும், வேலை­யாட்­க­ளையும் அச்­சு­றுத்­தினர்.

கொழும்பு பள்ளி வாசல்கள் சம்­மே­ளனம், தெஹி­வளை கல்­கிசை சம்­மே­ளனம் என்­பன பொலி­ஸா­ருடன் பேச்சு வார்த்தை நடத்­தின. இறு­தியில் முஸ்லிம் பாரா­ளு­முன்றஉறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் பிரதமருக்கும் அமைச்சர் சாகல ரத்நாயக்காவுக்கும் அழுத்தங்களைக் கொடுத்ததை யடுத்து வேலைகளை ஆரம்பிக்க வாய்ப்பு கிடைத்தது.

மீண்டும் பள்ளிவாசல் நிர்வாகம் தற்காலிகமாக விஸ்தரிப்புக் பணியினை நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Vidivelli

LEAVE A REPLY