மக்கள் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 4 புதிய பாலங்கள்

0
21

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

TNA MP G. Srinesanமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் புதிதாக பாலங்கள் அமைக்க வேண்டிய தேவை உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ஞா. சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நிருமாணிக்கப்படவுள்ள பாலங்கள் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முதற்கட்டமாக 4 புதிய பாலங்கள் நிருமாணிக்கப் படவுள்ளன அந்த வகையில் பங்குடாவெளி – நரிப்புல் தோட்டத்தை இணைக்கும் பாலம், கிண்ணையடி – பிரம்படித்தீவை இணைக்கும் பாலம், சந்திவெளி – திகிலிவட்டை இணைக்கும் பாலம், மற்றும் றாணமடு – மாலையர்கட்டை இணைக்கும் பாலம் ஆகிய இடங்களிலே இப்புதிய பாலங்கள் நிருமாணிக்கப்படவுள்ளன.

இந்த 4 பாலங்களையும் நிருமாணிப்பதற்கு 2820 மில்லியன் (282 கோடி ரூபா) நிதி செலவாகும் என நெடுஞ்சாலைகள் அமைச்சின் பொறியியலாளர்களால் தற்காலிக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றுள், றாணமடு பாலத்திற்கு 120 மில்லியன் ரூபாவும், சந்திவெளிப் பாலத்திற்கு 1200 மில்லியன் ரூபாவும், கிண்ணையடிப் பாலத்திற்கு 850 மில்லியனும், பங்குடாவெளிப் பாலத்திற்கு 650 மில்லியனும் செலவாகும் நெடுஞ்சாலைகள், அமைச்சின் பொறியியலாளர்களால் தற்காலிக செலவு மதிப்பீடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவற்றுக்கான நிதியினை வழங்குவதாக கடந்த வரவு செலவுத் திட்ட உரையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY