காத்தான்குடி சமூக மதிப்பீட்டிற்கான அமைப்பினால் வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு விநியோகம்

0
207

(எம்.எச்.எம். அன்வர்)

DSC01284காத்தான்குடி சமூக மதிப்பீட்டிற்கான அமைப்பின் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு விநியோகம் நேற்று முன்தினம் (18) சனிக்கிழமை புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் இல்மி அஹமட்லெவ்வை தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக NFGG தவிசாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான், காத்தான்குடி மத்தியஸ்த சபை தலைவர் எம்.ஜ.எம். உசனார், அன்வர் வித்தியாலய அதிபர் ஏ.எல். முனீர் அகமட், சாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலை முகாமையாளர் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில், மாகாண இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.ஜ.எம். மாஹிர் மற்றும் உலமாக்கள், கல்விமான்கள், சமூக சேவையாளர்களும் கலந்து கொண்டனர்.

சமூக சேவையின் ஓர் அங்கமாக மேற்படி அமைப்பானது ஒவ்வொரு ரமழான் மாதமும் வறிய குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC01286 DSC01290

LEAVE A REPLY