ரஷ்யாவில் படகு கவிழ்ந்து விபத்து: 10 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி

0
83

imageரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கரேலியா குடியரசில் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக, அந்நாட்டு உள்ளூர் அவசரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஏராளமான குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான படகில் 51 பேர் பயணம் செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சைமோஜிரோ ஏரியில் சென்ற மூன்று படகுகளில் இரண்டு மோசமான வானிலையால் விபத்துக்குள்ளானது.

மாஸ்கோவை சேர்ந்த 10 குழந்தைகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக, மாஸ்கோ மேயர், செர்ஜியே சோபினின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY